Monday, January 11, 2021

இங்குவினல் ஹெர்னியா இருந்தால் நடைபயிற்சி செய்வது நல்லதா?

 


குடல், கொழுப்பு திசுக்கள் போன்ற உங்கள் உறுப்பின் ஒரு பகுதி, இங்குவினல் கால்வாயின் மூடப்படாத ஒரு திறப்பின் மூலம் உள்ளே திருத்தும் செல்லும் போது இங்குவினல் ஹெர்னியா ஏற்படுகிறது. இந்த வகை குடலிறக்கம் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், அதை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டியது அவசியம் ஆகும். சில வகை உடல் பயிற்சிகள் உங்கள் குடலிறக்கத்தை மோசமாக்கலாம். ஆனாலும் நீங்கள் இப்படியான உடல் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சோம்பிய வாழ்க்கை முறையை வாழ முடியும் என்று இது குறிக்கவில்லை.


இலகுவான உடற்பயிற்சிகளைச் செய்வது நிச்சயமாக உங்கள் குடலிறக்கத்தை சமாளிக்க உதவும். குறிப்பாக நீங்கள் உடல் பருமனாக இருந்தால் இது உண்மை. பளு தூக்குதல் போன்ற கடுமையான பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றாலும், நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் நிச்சயமாக பயனளிக்கும். இங்குவினல் குடலிறக்கம் கொண்ட பருமனானவர்களுக்கு நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் உங்கள் குடலிறக்கம் நடக்கும்போது வலியை ஏற்படுத்தினால், நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். எது எப்படியிருந்தாலும், நீங்கள் நடைபயிற்சி அல்லது பிற வகையான இலகுவான பயிற்சிகளை செய்யலாம் என்று பரிந்துரைக்க குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் மட்டுமே முடியும். ஏனெனில் உங்கள் குடலிறக்கத்தின் தீவிரம் அறுவை சிகிச்சை நிபுணருக்கு மட்டுமே நன்றாகத் தெரியும். எனவே உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927 with Dr Maran who does Hernia repair Surgery in Chennai regularly. Visit Springfield Wellness Centre for the Hernia surgery in Chennai

For More Information about Gastro surgery in Chennai visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

No comments:

Post a Comment

Diagnosing Anemia - In Tamil

  இரத்த சோகை குறித்த எங்கள் முந்தைய வலைப்பதிவில், இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதைக் கண்டோம். அதில் இரும்பு...